×

‘ஒரே மதம்-ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ : பாஜகவின் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதன் விவரம்: தலித்துகள், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டும் தீய உள்நோக்கோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான சதி முயற்சிகளையும் முறியடித்து சமூக நீதியை பாதுகாப்போம்.

மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த, குறிப்பாக சட்டமியற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர களப்பணியாற்றுவோம்.
‘ஒரே மதம் - ஒரே மொழி ஒரே கலாச்சாரம்’ என்னும் சங்பரிவார்களின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம்.

Tags : Pajaga , Thirumavalvan
× RELATED பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது : அமைச்சர் ராஜ்நாத் சிங்